TSK

TSK · Leviticus 17:8

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

முகாமிற்குள்ளேயோ அல்லது வெளியேயோ அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாகக் கருதப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் மக்களுக்குள் இல்லாமல் அறுப்புண்டுபோவான்.

ரூபனுடைய சந்ததியினர்களும் காத்தின் சந்ததியினர்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும் கானான் தேசத்திற்கு எதிரே இஸ்ரவேல் மக்களுக்குச் சொந்தமான யோர்தானின் எல்லைகளில் ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள் என்று இஸ்ரவேல் மக்கள் கேள்விப்பட்டார்கள்.

நீங்கள் இந்த நாளிலே யெகோவாவைப் பின்பற்றாதபடித் திரும்பி, இந்த நாளிலே யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்யும்படியாக உங்களுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலின் தேவனுக்கு எதிராகச் செய்த இந்தத் துரோகம் என்ன?

அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் யெகோவாவுக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் யெகோவாவை நோக்கி வேண்டிக்கொண்டான்; யெகோவா அவனுக்கு பதில் அருளினார்.

அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப்போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது யெகோவா: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், யெகோவாவுக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி,

அப்பொழுது எலியா எல்லா மக்களையும் நோக்கி: என் அருகில் வாருங்கள் என்றான்; எல்லா மக்களும் அவன் அருகில் வந்தபோது, தகர்க்கப்பட்ட யெகோவாவுடைய பலிபீடத்தை அவன் பழுதுபார்த்து: