TSK

TSK · Numbers 26:65

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

¶ இஸ்ரவேலர்கள் ராமசேசைவிட்டுக் கால்நடையாகப் பயணம்செய்து, சுக்கோத்திற்குப் போனார்கள்; அவர்கள், பிள்ளைகள் தவிர ஆறுலட்சம் ஆண்களாக இருந்தார்கள்.

நீ அவர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என்னுடைய காதுகள் கேட்கச் சொன்னபடியே உங்களுக்குச் செய்வேன் என்பதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவா உரைக்கிறார்.

உங்களுடைய பிரேதங்களோ இந்த வனாந்திரத்திலே விழும்.

தேசத்தைச் சுற்றிப் பார்க்கப்போன அந்த மனிதர்களில் நூனின் மகனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் மகனாகிய காலேபும் மட்டும் உயிரோடு இருந்தார்கள்.

போர்செய்யத் தகுதியுள்ளவர்களான அந்தச் சந்ததியெல்லாம் யெகோவா தங்களுக்கு வாக்களித்தபடியே முகாமிலிருந்து அழிந்துபோக, நாம் காதேஸ்பர்னேயாவைவிட்டுப் புறப்பட்டதுமுதல், சேரேத் ஆற்றைக் கடக்கும்வரை சென்றகாலங்கள் முப்பத்தெட்டு வருடங்கள்.

யோசுவா இப்படி விருத்தசேதனம்செய்த நோக்கம் என்னவென்றால்: எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா ஆண்மக்களாகிய யுத்த மனிதர்கள் எல்லோரும் எகிப்திலிருந்து புறப்பட்டப்பின்பு, வழியில் வனாந்திரத்திலே இறந்துபோனார்கள்.

பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்; யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.

எனவே, தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடம் கண்டிப்பையும், உன்னிடத்தில் தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருந்தால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைக்காவிட்டால் நீயும் வெட்டப்பட்டுப் போவாய்.

மேலும், அவர் நாற்பது வருடங்களாக யாரை வெறுத்தார்? பாவம் செய்தவர்களைத்தானே? அவர்களுடைய மரித்த சடலங்கள் வனாந்திரத்தில் விழுந்துபோனதே.