TSK

TSK · Ezekiel 21:17

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

Back to passage

¶ அப்பொழுது பாலாக் பிலேயாமின்மேல் கோபம் வந்தவனாகி, கையோடு கைதட்டி, பிலேயாமை நோக்கி: “என்னுடைய எதிரிகளைச் சபிக்க உன்னை அழைத்து வந்தேன்; நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்.

ஆகையால் சேனைகளின் யெகோவாவும் இஸ்ரவேலின் வல்லவருமாகிய ஆண்டவர் சொல்கிறதாவது; ஓகோ, நான் என் எதிரிகளில் கோபம் தணிந்து, என் பகைவர்களை பழிவாங்குவேன்.

நான் திரும்பினபின்பு மனவேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான் என்னை அறிந்துகொண்டதற்குப் பின்பு மார்பில் அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி தலைகுனிந்துகொண்டும் இருக்கிறேன், என் இளவயதின் நிந்தையைச் சுமந்துவருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க் கேட்டேன்.

இவ்விதமாக என்னுடைய எரிச்சல் உன்னை விட்டு நீங்கும்படி, நான் என்னுடைய கடுங்கோபத்தை உன்னில் ஆறச்செய்து, இனி கோபமாக இல்லாமல் அமர்வேன்.

இதோ, நீ அநியாயமாகச் சம்பாதித்த பொருளினால், உன்னுடைய நடுவில் நீ சிந்தின இரத்தத்திற்காக நான் கைகொட்டுகிறேன்.

பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு: பார், வடதேசத்திற்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்தப்படுத்தியது என்று என்னுடன் சொன்னார்.