TSK

TSK · Genesis 34:14

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையாக இருந்தால், அந்த ஆத்துமா என்னுடைய உடன்படிக்கையை மீறினதால், தன் மக்களுடன் இல்லாதபடி நீக்கப்பட்டுப்போவான்” என்றார்.

அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பச்செய்த அவர்களுடைய ஆண் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம்செய்தான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம் செய்யாததினால் அவர்கள் விருத்தசேதனம் செய்யப்படாமலிருந்தார்கள்.

அப்பொழுது அவனுடைய தாயும் அவனுடைய தகப்பனும் அவனை நோக்கி: நீ போய், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தர்களிடத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளவேண்டியதென்ன? உன்னுடைய சகோதரர்களின் மகள்களிலும், எங்கள் மக்கள் அனைவரிலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன்னுடைய தகப்பனை நோக்கி: அவள் என்னுடைய கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே திருமணம் செய்துவைக்கவேண்டும் என்றான்.

அப்பொழுது தாவீது தன்னுடன் நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்திப்பதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தியன் எம்மாத்திரம் என்றான்.

பெலிஸ்தர்களின் மகள்கள் சந்தோஷப்படாதபடியும், விருத்தசேதனம் இல்லாதவர்களின் மகள்கள் கொண்டாடாதபடியும், அதைக் காத் பட்டணத்தில் அறிவிக்காமலும் அஸ்கலோனின் வீதிகளில் தெரிவிக்காமலும் இருங்கள்.

அந்த கடிதங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று தெரியப்படுத்தி, நாபோத்தை மக்களின் முன்பாக நிறுத்தி,

¶ அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் கனவில் யோசேப்புக்குத் தோன்றி: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்.

மேலும், விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனம் இல்லாதவர்களாக விசுவாசிக்கிற எல்லோருக்கும் நீதி எண்ணப்படுவதற்காக அவர்களுக்கு அவன் தகப்பனாக இருப்பதற்கும்,