இப்போதும் நான் என் திராட்சைத்தோட்டத்திற்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதிக்கப்பட்டுப்போகும்.
TSK
TSK · Isaiah 32:10
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
பயிர்வெளியிலிருந்து சந்தோஷமும் களிப்பும் இல்லாமல் போனது; திராட்சைத்தோட்டங்களில் பாடலுமில்லை ஆர்ப்பரிப்புமில்லை; ஆலையில் இரசத்தை மிதிக்கிறவனுமில்லை; சந்தோஷ ஆரவாரத்தை ஓயச்செய்தேன்.
திராட்சைரசத்துக்காக வீதிகளிலே கூக்குரல் உண்டு; அனைத்து சந்தோஷமும் குறைந்து, தேசத்தின் மகிழ்ச்சி இல்லாமல் போகும்.
மகிழ்ச்சியின் சத்தத்தையும், சந்தோஷத்தின் சத்தத்தையும், மணமகனின் சத்தத்தையும், மணமகளின் சத்தத்தையும், எந்திரத்தின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் அவர்களிலிருந்து நீங்கச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
இஸ்ரவேல் மக்கள் அநேகநாட்களாக ராஜாவும், அதிபதியும் இல்லாமலும், பலியும், சிலையும் இல்லாமலும், ஏபோத்தும், தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள்.
திராட்சைச்செடி வதங்கி, அத்திமரம் சாரமற்றுப்போகிறது; மாதுளை, பேரீச்சம், கிச்சிலி முதலிய தோட்டத்தின் செடிகள் எல்லாம் வாடிப்போனது; சந்தோஷம் மனுக்குலத்தைவிட்டு ஒழிந்துபோனது.
அவர்களுடைய சொத்து கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்சைத்தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை.