அதற்கு அவன்: “யெகோவா என் பயணத்தை வாய்க்கச்செய்திருக்க, நீங்கள் என்னைத் தடுக்காதிருங்கள்; நான் என் எஜமானிடத்திற்குப்போக என்னை அனுப்பிவிடவேண்டும்” என்றான்.
TSK
TSK · Luke 10:4
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டுபோ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய, போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு,
உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக; உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும்.
வழிக்குப் பையையோ, அப்பத்தையோ, இடுப்புக் கச்சையில் பணத்தையோ, எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமட்டும் எடுத்துக்கொண்டுபோகவும்;
வேறொருவனை அவர் நோக்கி: ‹என்னைப் பின்பற்றிவா› என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண என்னை அனுப்பவேண்டும் என்றான்.
பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: ‹நான் உங்களைப் பணப்பையும் சாமான் பையும் காலணிகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாவது உங்களுக்குக் குறைவாக இருந்ததா› என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாக இருந்ததில்லை என்றார்கள்.