அவனுடைய மனம், யாக்கோபின் மகளாகிய தீனாள்மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அவளுடைய மனதிற்கு இன்பமாகப் பேசினான்.
TSK
TSK · Matthew 19:5
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவரைப் பணிந்துகொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக.
¶ அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடு ஒன்றாக இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போல நேசித்தான்.
என்னுடைய சகோதரனான யோனத்தானே, உனக்காக நான் துயரப்படுகிறேன்; நீ எனக்கு மிகவும் இன்பமாக இருந்தாய்; உன்னுடைய அன்பு ஆச்சரியமாக இருந்தது; பெண்களின் அன்பை விட அதிகமாக இருந்தது.
மகளே கேள், நீ உன்னுடைய செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன்னுடைய மக்களையும் உன்னுடைய தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ‹உங்களுடைய இருதயக் கடினத்தினாலே இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான்.›
வேசியோடு இணைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாக இருக்கிறானென்று உங்களுக்குத் தெரியாதா? இருவரும் ஒரே மாம்சமாக இருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே.
மனைவியானவள் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, கணவனே அதற்கு அதிகாரி; அப்படியே கணவனும் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.