TSK

TSK · Matthew 8:25

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

ஆசா தன் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: யெகோவாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலமில்லாதவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய யெகோவாவே, எங்களுக்குத் துணையாக நில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; யெகோவாவே, நீர் எங்கள் தேவன்; மனிதன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.

யெகோவாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? துன்பம் நேரிடுகிற நேரங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?

எழும்பு, எழும்பு, பெலன்கொள்; யெகோவாவின் புயமே, ஆரம்ப நாட்களிலும் முந்தின தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?

Mark 4:38 TSK

இயேசு, கப்பலின் பின்பக்கத்தில் தலையணையை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மரித்துப்போவதைப்பற்றி உமக்குக் கவலை இல்லையா? என்றார்கள்.