தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவுக்கு துரோகம்செய்த உங்கள் முற்பிதாக்களைப்போலவும் உங்கள் சகோதரர்களைப்போலவும் இருக்காதீர்கள்; அதற்காக, நீங்கள் காண்கிறபடியே, அவர்கள் அழிந்துபோகிறதற்கு ஒப்புக்கொடுத்தாரே.
TSK
TSK · Micah 5:3
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
¶ அக்காலத்திலே இஸ்ரவேலின் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய யெகோவாவையே உண்மையாகச் சார்ந்துகொள்வார்கள்.
யாக்கோபின் வம்சங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் முடிவுவரைக்கும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை தேசங்களுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்.
இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது தாவீதிற்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பச்செய்வேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ஆட்சிசெய்து, பூமியில் நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.
யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: யாக்கோபுக்காக மகிழ்ச்சியாய் கெம்பீரித்து, தேசங்களுடைய தலைவருக்காக ஆர்ப்பரியுங்கள்; சத்தத்தைக் கேட்கச்செய்து, துதித்து: யெகோவாவே, இஸ்ரவேலில் மீதியான உமது மக்களைக் காப்பாற்றும் என்று சொல்லுங்கள்.
ஆதலால் நான் என் தானியத்தை அதின் காலத்திலும், என் திராட்சைரசத்தை அதின் காலத்திலும் திரும்ப எடுத்துக்கொண்டு, அவளுடைய நிர்வாணத்தை மூடுகிறதற்கு நான் கொடுத்திருந்த ஆட்டுரோமத்தையும் சணலையும் திரும்பப் பிடுங்கிக்கொள்ளுவேன்.
எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போல் ஆக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாகப் பொங்குகிறது.
நொண்டியானவளை மீதியான மக்களாகவும், தூரமாகத் தள்ளப்பட்டுப்போனவளைப் பலத்த மக்களாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் யெகோவா சீயோன் மலையிலே இதுமுதல் என்றென்றைக்கும் ராஜாவாக இருப்பார்.
நீ சாப்பிட்டும் திருப்தியடையாமல் இருப்பாய்; உனக்குள்ளே சோர்வுண்டாகும்; பாதுகாத்தும் நீ தப்புவிப்பதில்லை; நீ தப்புவிப்பதையும் பட்டயத்திற்கு ஒப்புக்கொடுப்பேன்.
நான் யூதா வம்சத்தாரைப் பலப்படுத்தி, யோசேப்பு வம்சத்தாரை காப்பாற்றி, அவர்களைத் திரும்ப நிலைக்கச்செய்வேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்; அவர்கள் என்னால் ஒருக்காலும் தள்ளிவிடப்படாதவர்களைப்போல இருப்பார்கள்; நான் அவர்களுடைய தேவனாகிய யெகோவா, நான் அவர்களுக்குச் செவிகொடுப்பேன்.
‹பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்கு சகோதரனும், சகோதரியும், தாயுமாகவும் இருக்கிறான்› என்றார்.
தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பேறானவராக இருப்பதற்காக, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;
அவனுக்கு உண்டான தேவனுடைய பதில் என்ன? பாகாலுக்கு முன்பாக முழங்கால்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே.
¶ அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு பெண் சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் தலையின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன.