TSK

TSK · Genesis 34:25

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

Back to passage

மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: “நான் அற்பமாக எண்ணப்பட்டதைக் யெகோவா கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார்” என்று சொல்லி, அவனுக்கு சிமியோன் என்று பெயரிட்டாள்.

யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் மீதியானியர்களுடன் யுத்தம்செய்து, ஆண்கள் எல்லோரையும் கொன்றுபோட்டார்கள்.

யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்த மனிதர்களான எல்லோரும் இறக்கும்வரைக்கும், இஸ்ரவேல் மக்கள் 40 வருடங்கள் வனாந்திரத்தில் நடந்து திரிந்தார்கள்; யெகோவா எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்களுடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் செய்த நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று யெகோவா அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார்.

எசேக்கியா தனக்குச் செய்யப்பட்ட உதவிக்குத் தகுந்தவாறு நடக்காமல் மனமேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபம் வந்தது.

பெண்ணைப்பற்றிய எரிச்சல் ஆணுக்கு கடுங்கோபத்தை உண்டாக்கும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடமாட்டான்.