TSK

TSK · Matthew 26:48

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

Back to passage

அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடு இரகசியமாகப் பேசப்போகிறவன்போல, அவனை வாசலின் நடுவே ஒரு பக்கமாக அழைத்துப்போய், தன்னுடைய தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க, அங்கே அவனை வயிற்றிலே குத்திக் கொன்றுபோட்டான்.

அருகில் உள்ளவனுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்களுடைய இருதயங்களில் தீமைகளை வைத்திருக்கிற துன்மார்க்கர்களோடும் அக்கிரமக்காரர்களோடும் என்னை வாரிக்கொள்ளாமலிரும்.

அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் யாரை முத்தம் செய்கிறேனோ அவன்தான், அவனைப் பிடித்துக் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.