TSK

TSK · Matthew 6:22

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

Back to passage

‹கண்ணானது சரீரத்திற்கு விளக்காக இருக்கிறது; உன் கண் தெளிவாக இருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும்; உன் கண் கெட்டதாக இருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாக இருக்கும்.›

ஆனாலும், பாம்பானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை ஏமாற்றினதுபோல, உங்களுடைய மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையிலிருந்து விலகும்படி கெடுக்கப்படுமோ என்று பயந்திருக்கிறேன்.

வேலைக்காரர்களே, சரீரத்தின்படி உங்களுடைய எஜமான்களாக இருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனிதர்களைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு பணிவிடைசெய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடு பணிவிடைசெய்யுங்கள்.