TSK

TSK · Numbers 15:22

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

Back to passage

“கூடி வந்த இஸ்ரவேல் சபையார் எல்லோரும் அறியாமையினால் பாவம்செய்து, அது தங்களுடைய கண்களுக்கு மறைவாக இருக்கிறதினால், யெகோவாவுடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்திற்குட்பட்டுக் குற்றவாளிகளானால்,

“சாதாரண மக்களில் ஒருவன் அறியாமையினால் யெகோவாவின் கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்திற்குட்பட்டுக் குற்றவாளியானால்,

“ஒருவன் யெகோவாவுக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றம்செய்து, அறியாமையினால் பாவத்திற்குட்பட்டால், அவன் தன் குற்றத்திற்காக பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் மதிப்புள்ள பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை குற்றநிவாரணபலியாகக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து,

‹அறியாதவனாக இருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகம் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்; மனிதர்கள், எவனிடத்தில் அதிகமாக ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாகக் கேட்பார்கள்.›