TSK

TSK · Numbers 3:38

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

Back to passage

இஸ்ரவேல் மக்களாகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடி லேவியர்கள் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் முகாமிட்டு, லேவியர்கள் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார்.

அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாக அவனுடைய காவலையும் எல்லாச் சபையின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடை வேலைகளைச் செய்யவேண்டும்.

கெர்சோனியர்களின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் பின்புறத்தில் மேற்கே முகாமிடவேண்டும்.

அபியாயேலின் மகனாகிய சூரியேல் என்பவன் அவர்களுக்குத் தலைவனாக இருந்தான்; இவர்கள் வாசஸ்தலத்தின் வடபுறமான பக்கத்தில் முகாமிடவேண்டும்.

அவர்களுடைய சகோதரர்களாகிய மற்ற லேவியர்கள் தேவனுடைய ஆலயமாகிய ஆசரிப்புக்கூடாரத்தின் பணிகளைச் செய்ய நியமிக்கப்பட்டிருந்தார்கள்.