எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும்,
TSK
TSK · 1 Chronicles 11:4
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசமாகிய கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்களுடைய தேசத்திற்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்று சொல்.
எருசலேமிலே குடியிருந்த எபூசியர்களை யூதா கோத்திரத்தார்கள் துரத்திவிடமுடியாமல்போனது; ஆகவே இந்த நாள்வரை எபூசியர்கள் யூதா கோத்திரத்தார்களோடு எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.
பென்யமீனின் மகன்கள் எருசலேமிலே குடியிருந்த எபூசியர்களையும் துரத்திவிடவில்லை; எனவே, எபூசியர்கள் இந்த நாள்வரை பென்யமீன் மக்களோடு எருசலேமில் குடியிருக்கிறார்கள்.
¶ தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்கள்மேல் யுத்தம்செய்ய ராஜா தன்னுடைய மனிதர்களோடு எருசலேமுக்குப் போனான். அவர்கள்: இதிலே தாவீதால் நுழையமுடியாது என்று நினைத்து, தாவீதை நோக்கி: நீ இதற்குள் நுழையமுடியாது; குருடர்களும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள்.