தாவீது லேவியர்களின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரர்களாகிய பாடகர்களைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்கள் முழங்க, தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷம் உண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டும் என்று சொன்னான்.
TSK
TSK · 1 Chronicles 9:33
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
¶ மேலும் சுரமண்டலங்களாலும், தம்புருக்களாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் மகன்களில் சிலரை, தாவீதும் தேவாலய சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் செய்கைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கையாவது:
Nehemiah 11:17
TSK
ஆசாபின் மகன் சப்தியின் மகனாகிய மீகாவின் மகன் மத்தனியா ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவனும் அவனுடைய சகோதரர்களில் இரண்டாவதான பக்பூக்கியா என்னும் ஒருவனும், எதுத்தூனின் மகன் காலாவின் மகனாகிய சம்முவாவின் மகன் அப்தாவுமே.
Psalms 134:1
TSK
இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே, நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.