TSK

TSK · 1 Samuel 21:4

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

அவன் மக்களை நோக்கி: “மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியிடம் சேராமல் இருங்கள்” என்றான்.

விந்து கழிந்தவனோடே பெண் படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பார்களாக.

அப்பொழுது யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து எடுக்கப்பட்ட சமூகத்தின் அப்பங்களைத்தவிர, வேறு அப்பம் அங்கே இல்லாததால் ஆசாரியன் அவனுக்குப் பரிசுத்த அப்பத்தை கொடுத்தான்; அவைகள் எடுக்கப்படுகிற நாளிலே அதற்குப் பதிலாகச் சூடான அப்பம் வைக்கப்படும்.

அதற்கு அவர்: ‹தாவீதும் அவனோடு இருந்தவர்களும் பசியாக இருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?›