இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் பெத்தேலில் உண்டாக்கியிருந்த பலிபீடமும் மேடையும் ஆகிய அவ்விரண்டையும் அவன் இடித்து, அந்த மேடையைச் சுட்டெரித்துத் தூளாக்கி, விக்கிரகத்தோப்பையும் சுட்டெரித்தான்.
TSK
TSK · 2 Chronicles 34:6
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
¶ அதன்பின்பு இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு பஸ்காவைக் கொண்டாட, எருசலேமில் இருக்கிற யெகோவாவுடைய ஆலயத்திற்கு வாருங்கள் என்று எசேக்கியா இஸ்ரவேல், யூதா எங்கும் ஆட்களை அனுப்பினதுமட்டுமல்லாமல், எப்பிராயீம் மனாசே கோத்திரங்களுக்கும் கடிதங்களை எழுதியனுப்பினான்.
¶ இவைகளெல்லாம் முடிந்தபின்பு, வந்திருந்த இஸ்ரவேலர்கள் எல்லோரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், யூதா பென்யமீன் எங்கும் எப்பிராயீமிலும் மனாசேயிலும் இருந்த சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் இடித்துப்போட்டார்கள்; பின்பு இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் சொந்த இருப்பிடத்திற்குத் திரும்பினார்கள்.
மண்வெட்டியால் கொத்தப்படுகிற மலைகள் உண்டே; முட்செடிகளுக்கும் நெரிஞ்சில்களுக்கும் பயப்படுவதினால் அவைகளில் ஒன்றிற்கும் போகமுடியாமல் இருப்பதினால், அவைகள் மாடுகளை மேயவிடுவதற்கும், ஆடுகள் மிதிப்பதற்குமான இடமாயிருக்கும் என்றான்.