என்னுடைய கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என்னுடைய ஆவியை உங்களுக்கு அருளுவேன், என்னுடைய வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
TSK
TSK · Acts 11:16
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான தண்ணீர் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா அசுத்தமான சிலைகளையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.
¶ அக்காலத்தில் மலைகள் திராட்சைரசத்தைப் பொழியும், மலைகள் பாலாக ஓடும், யூதாவின் ஆறுகள் எல்லாம் கரைபுரண்டு ஓடும்; ஒரு ஊற்று யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டு சித்தீம் என்னும் பள்ளத்தாக்கை நீர்ப்பாய்ச்சலாக்கும்.
நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கம்பண்ணினான்.
அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை ஞாபகப்படுத்தி,
நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் இருப்பதை நீ பார்ப்பாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்.
‹அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேன் என்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன்; நான் உங்களோடு இருந்ததினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை.›
நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவியானவர் உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.
நாம் யூதர்களானாலும், கிரேக்கர்களானாலும், அடிமைகளானாலும், சுயாதீனர்களானாலும், எல்லோரும் ஒரே ஆவியானவராலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் செய்யப்பட்டு, எல்லோரும் ஒரே ஆவியானவருக்குள்ளாகவே தாகம் தீர்க்கப்பட்டோம்.
¶ பிரியமானவர்களே, இந்த இரண்டாம் கடிதத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன்.