TSK

TSK · Exodus 10:22

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

மக்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்திற்கு அருகில் சேர்ந்தான்.

“இந்த வார்த்தைகளைக் யெகோவா மலையிலே அக்கினி, மேகம், காரிருள் ஆகியவற்றிலிருந்து உங்கள் சபையார் அனைவரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி என்னிடத்தில் கொடுத்தார்.

அவர் இருளை அனுப்பி, காரிருளை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பவர்கள் இல்லை.

உன்னை நான் அணைத்துப்போடும்போது, வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டு போகச்செய்வேன்; சூரியனை மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன்னுடைய ஒளியைக் கொடுக்காமல் இருக்கும்.

Joel 2:2 TSK

அது இருளும் காரிருளுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு மலைகளின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு மக்கள்கூட்டம் தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன்பு ஒரு காலத்திலும் உண்டாகவுமில்லை, இனித் தலைமுறை தலைமுறையாக இனிவரும் வருடங்களிலும் உண்டாவதுமில்லை.

Amos 4:13 TSK

அவர் மலைகளை உருவாக்கினவரும், காற்றை உருவாக்கினவரும், மனிதனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், அதிகாலையை இருளாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த இடங்களின்மேல் உலாவுகிறவருமாக இருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய யெகோவா என்பது அவருடைய நாமம்.