TSK

TSK · Exodus 11:5

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

எனக்கு ஆராதனை செய்யும்படி என்னுடைய மகனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்று சொன்னால் நான் உன்னுடைய மகனை, உன்னுடைய மூத்தமகனை கொல்லுவேன் என்று யெகோவா சொன்னார் என்று சொல்” என்றார்.

¶ நடுஇரவிலே சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும், மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் யெகோவா அழித்தார்.

பெலிஸ்தர்கள் அவனைப் பிடித்து, அவனுடைய கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைக்க வைத்தார்கள்.

அவர்களுடைய தேசத்திலே முதற்பிறப்புகள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான எல்லோரையும் அழித்தார்.

எகிப்தியர்களுடைய தலைப்பிள்ளைகளை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

வாலிபர்களை இயந்திரம் அரைக்கக் கொண்டுபோனார்கள்; இளைஞர்கள் விறகு சுமந்து தடுமாறி விழுகிறார்கள்.

விசுவாசத்தினாலே, தலைப்பிள்ளைகளைக் கொல்லுகிறவன் இஸ்ரவேலரைத் தொடாமல் இருக்க, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்.