மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவனுடைய வேலைக்காரர்களுக்கு முன்பாகவும் தன்னுடைய கோலைப் போட்டான், அது பாம்பானது.
TSK
TSK · Exodus 12:28
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படி, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே யெகோவா என்பதை எகிப்தியர்கள் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன்” என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள்.
¶ இப்படியே ஆசரிப்புக்கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள்.
மோசே அந்த வேலைகளையெல்லாம் பார்த்தான்; யெகோவா கற்பித்தபடியே அதைச் செய்திருந்தார்கள். மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள்.
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் செய்தார்கள்.
இஸ்ரவேல் மக்களின் பாதிப்பங்குக்கு வந்த இந்த மனிதஉயிர்களிலும் மிருகங்களிலும் மோசே ஐம்பதிற்கு ஒன்று வீதமாக, எடுத்து அவைகளைக் யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடி, யெகோவாவுடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியர்களுக்குக் கொடுத்தான்.
அதற்கு அவள்: உங்களுடைய வார்த்தையின்படியே ஆகக்கடவது என்று சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டாள்; அவர்கள் போய்விட்டார்கள்; பின்பு அவள் அந்த சிவப்புக்கயிற்றை ஜன்னலிலே கட்டிவைத்தாள்.
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரவேல் மக்கள் செய்து, தேசத்தைப் பங்கிட்டார்கள்.
அவன் போய், யெகோவாவுடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராக இருக்கிற கேரீத் ஆற்றின் அருகில் தங்கியிருந்தான்.