TSK

TSK · Isaiah 29:2

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

ஆகையால் யெகோவாவுடைய கோபம் தமது மக்களுக்கு விரோதமாக மூண்டது; அவர் தமது கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, மலைகள் அதிரத்தக்கதாகவும், அவர்களுடைய பிணங்கள் நடுவீதிகளில் குப்பை போலாகத்தக்கதாகவும், அவர்களை அடித்தார்; இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

இனி ஒருநாள் நோபிலே தங்கி, மகளாகிய சீயோனின் மலைக்கும், எருசலேமின் மேட்டிற்கும் விரோதமாகக் கை நீட்டி மிரட்டுவான்.

¶ இதோ, யெகோவா தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து, அதின் குடிமக்களைச் சிதறடிப்பார்.

போஸ்றா பட்டணத்திலே யெகோவாவுக்கு ஒரு யாகமும், ஏதோம் தேசத்திலே மகா அழிவும் உண்டு; யெகோவாவுடைய பட்டயம் இரத்தத்தால் திருப்தியாகி, கொழுப்பினால் பூரிக்கின்றது; ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய சிறுநீரகங்களின் கொழுப்பினாலும் திருப்தியாகும்.

இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும், துக்கமும், நிந்தையும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது; பெறவோ பெலன் இல்லை.

அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவும் எல்லாப் போர் வீர்களும் அவர்களைக் கண்டபோது, ஓடி, இரவு நேரத்தில் ராஜாவின் தோட்டத்துவழியே, இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார்கள்; அவன் வயல்வெளியின் வழியே போய்விட்டான்.

ஆகையால், நான் அவர்கள்மேல் என்னுடைய கோபத்தை ஊற்றி, என்னுடைய கடுங்கோபத்தின் நெருப்பால் அவர்களை அழித்து, அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலையின்மேல் சுமத்துவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.

மனிதகுமாரனே, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ எல்லாவித பறவைகளையும் வெளியில் இருக்கிற எல்லா மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாகக் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்திற்குச் சுற்றிலுமிருந்து வந்து சேர்ந்து, இறைச்சியைச் சாப்பிட்டு இரத்தம் குடியுங்கள்.

பின்பு ஒரு தேவதூதன் சூரியனில் நிற்பதைப் பார்த்தேன்; அவன் வானத்தின் நடுவில் பறக்கிற எல்லாப் பறவைகளையும் பார்த்து: