உன் தேவனாகிய யெகோவா உன் சிறையிருப்பை மாற்றி, உனக்கு மனமிரங்கி, உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிதறடித்த எல்லா மக்களுக்குள்ளும் சிதறியிருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்வார்.
TSK
TSK · Isaiah 43:5
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து யெகோவாவிடத்தில் திரும்பும்; தேசங்களுடைய வம்சங்களெல்லாம் அவர் சமுகத்தில் தொழுதுகொள்ளும்.
கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், அப்படிச் சொல்வார்களாக.
அக்காலத்திலே, யெகோவா ஆற்றங்கரையின் விளைவு துவங்கி எகிப்தின் நதிவரை போரடிப்பார்; இஸ்ரவேல் மக்களே, நீங்கள் ஒவ்வொருவராகச் சேர்க்கப்படுவீர்கள்.
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்செய்வேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ நெருப்பில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; நெருப்புத்தழல் உன்னை சுட்டெரிக்காது.
இதோ, இவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இதோ, அவர்கள் வடக்கிலும் மேற்கிலுமிருந்து வருவார்கள்; இவர்கள் அஸ்வான் தேசத்திலுமிருந்து வருவார்கள் என்கிறார்.
¶ எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, யெகோவாவுடைய மகிமை உன்மேல் உதித்தது.
அந்நாட்களில் யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாருடன் சேர்ந்து, அவர்கள் ஏகமாக பாபிலோன் தேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் முற்பிதாக்களுக்குச் சொந்தமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்.
இஸ்ரவேல் வீட்டின் சந்ததியாரைத் தங்கள் சொந்ததேசத்தில் குடியிருப்பதற்கு வடதேசத்திலும், நான் அவர்களைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து அழைத்து வழிநடத்திக்கொண்டுவந்த யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சத்தியம் செய்வார்களென்று யெகோவா சொல்லுகிறார்.
யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபின் கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் குடியிருக்கும் இடங்களுக்கு இரக்கம்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரண்மனை முன்போல நிலைப்படும்.
என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலுமிருந்து விடுவித்துக் காப்பாற்றுவேன்; அப்பொழுது யாக்கோபு திரும்பிவந்து, அமைதியுடனும் பயமில்லாமல் இருப்பான்; அவனைத் தத்தளிக்கச்செய்வார் இல்லை.
நீ அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ, நான் இஸ்ரவேல் வீட்டாரை அவர்கள் போயிருக்கும் தேசங்களிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சொந்த தேசத்திலே வரச்செய்து,
யாக்கோபின் மக்களே, உங்களெல்லோரையும் நான் நிச்சயமாகக் கூட்டுவேன், இஸ்ரவேலின் மீதியானவர்களை நிச்சயமாகச் சேர்ப்பேன்; போஸ்றாவின் ஆடுகளைப்போல் அவர்களை ஒரே கூட்டமாக்குவேன், தன் தொழுவத்திற்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமமாக மக்கள் கூட்டத்தினாலே இரைச்சல் உண்டாகும்.
‹கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்த மக்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்.›
இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: ‹நீ பயப்படாமல் பேசு, மவுனமாக இருக்காதே;›