அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர்.
TSK
TSK · Isaiah 54:4
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
ஆகையால், ஆபிரகாமை மீட்டுக்கொண்ட யெகோவா யாக்கோபின் வம்சத்தைக்குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை.
யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.
நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனிதர்களின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.
அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே வாக்குக்கொடுக்கிறவன் சத்திய தேவன் பெயரில் வக்குக்கொடுப்பான்; முந்தின துன்பங்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறைந்துபோனது.
நீ உன்னுடைய எல்லா அருவருப்புகளிலும் வேசித்தனங்களிலும் நடக்கும்போது, நிர்வாணமும் உடையில்லாமலும் இருந்ததும், உன்னுடைய இரத்தத்திலே மிதிக்கப்பட ஏதுவாக இருந்ததுமான உன்னுடைய சிறுவயதின் நாட்களை நினையாமற்போனாய்.
ஆகிலும் உன்னுடைய இளவயதில் உன்னுடன்செய்த என்னுடைய உடன்படிக்கையை நான் நினைத்து, நிரந்தர உடன்படிக்கையை உனக்கு ஏற்படுத்துவேன்.
அப்படியே: “இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருக்கிறவன் வெட்கப்படுவது இல்லை” என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.