TSK

TSK · Isaiah 60:22

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

நாம் பார்க்கும்படி, அவர் துரிதமாகத் தமது கிரியையைச் சீக்கிரமாக நடப்பிக்கட்டுமென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருடைய ஆலோசனையை நாம் தெரிந்துகொள்ளும்படி அது சமீபித்து வரட்டுமென்றும் சொல்கிறவர்களுக்கு ஐயோ,

அப்பொழுது அந்த இரும்பும், களிமண்ணும், வெண்கலமும், வெள்ளியும், பொன்னும் முழுவதும் நொறுங்குண்டு, கோடைக்காலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடைக்காமல் காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோனது; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய மலையாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.

Micah 4:7 TSK

நொண்டியானவளை மீதியான மக்களாகவும், தூரமாகத் தள்ளப்பட்டுப்போனவளைப் பலத்த மக்களாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் யெகோவா சீயோன் மலையிலே இதுமுதல் என்றென்றைக்கும் ராஜாவாக இருப்பார்.

¶ வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ‹பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.›

Acts 2:41 TSK

அவனுடைய வார்த்தைகளை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையதினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விசுவாசிகளின் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

நீங்கள் தேவனுடைய விருப்பத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறுவதற்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாக இருக்கிறது.

¶ இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, எல்லாத் தேசங்களிலும் கோத்திரங்களிலும் மக்களிலும் மொழிக்காரர்களிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணிப்பார்க்க முடியாத திரளான மக்கள்கூட்டம், வெள்ளை அங்கிகளை அணிந்து, தங்களுடைய கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்பதைக் கண்டேன்.