TSK

TSK · John 18:3

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

யெகோவாவே, என்னுடைய எதிரிகள் எவ்வளவாகப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் அநேகர்.

¶ அவர் இப்படிப் பேசும்போது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடுகூட பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பின திரளான மக்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள்.

¶ அவர் அப்படிப் பேசும்போது மக்கள் கூட்டமாக வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தம் செய்வதற்காக அவரிடத்தில் நெருங்கினான்.

அந்த அப்பத் துண்டை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: ‹நீ செய்கிறதைச் சீக்கிரமாகச் செய்› என்றார்.

Acts 1:16 TSK

சகோதரர்களே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவர் தாவீதின் வாக்கினால் முன்சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.