TSK

TSK · Jude 1:8

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

நீங்கள் இதை சாப்பிடும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்” என்றது.

மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டம்கூடி, அவர்களை நோக்கி: “நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லோரும் பரிசுத்தமானவர்கள்; யெகோவா அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, யெகோவாவுடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்” என்றார்கள்.

தேசங்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும்? மக்கள் வீணான காரியத்தை ஏன் சிந்திக்கவேண்டும்?

தங்களுடைய தகப்பனைச் சபித்தும், தங்களுடைய தாயை ஆசீர்வதிக்காமலும் இருக்கிற சந்ததியாரும் உண்டு.

ராஜாவை உன்னுடைய மனதிலும் இகழாதே, ஐசுவரியவானை உன்னுடைய படுக்கையிலும் இகழாதே; ஆகாயத்துப்பறவை அந்த சத்தத்தைக் கொண்டுபோகும், இறக்கைகள் உள்ளவை அந்த செய்தியை அறிவிக்கும்.

‹திரும்பிவரும்போது, அது சுத்தப்படுத்தி ஜோடிக்கப்பட்டிருக்கிறதைக் கண்டு,›

Acts 7:27 TSK

ஆனால் மற்றவனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை நியமித்தவன் யார்?

Acts 23:5 TSK

அதற்குப் பவுல்: சகோதரர்களே, இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் மக்களின் தலைவரை குற்றம் சொல்லாதே” என்று எழுதியிருக்கிறதே என்றான்.

ஆகவே, புறக்கணிக்கிறவன் மனிதர்களை அல்ல, தமது பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தருளின தேவனையே புறக்கணிக்கிறான்.

உங்களை நடத்துகிறவர்கள், உங்களுடைய ஆத்துமாக்களுக்காக உத்திரவாதம் பண்ணுகிறவர்களாக விழித்திருக்கிறதினால், அவர்கள் துக்கத்தோடு இல்லை, சந்தோஷத்தோடு அதைச் செய்வதற்காக, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்கி இருங்கள்; அவர்கள் துக்கத்தோடு அதைச்செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்காது.

விசேஷமாக அசுத்தமான ஆசைகளோடு சரீரத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தரின் அதிகாரத்தை அவமதிக்கிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரமானவர்கள், அகங்காரம் நிறைந்தவர்கள், மகத்துவங்களை அவமானப்படுத்த பயப்படாதவர்கள்.