ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரச்செய்தார்; அவன் அவர்களுடைய வாலிபர்களை அவர்களின் பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தால் கொன்று, வாலிபர்களையும் கன்னிப்பெண்களையும் முதியோர்களையும் நரைமுடி உள்ளவர்களையும் விட்டுவிடவில்லை; எல்லோரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
TSK
TSK · Lamentations 2:22
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
தேசத்து மக்களே, பயமும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்கு நேரிடும்.
யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு இழிவானதோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக்கூடாமல் எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்திற்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்திற்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
மறுநாளில் பஸ்கூர் எரேமியாவைக் காவலறையிலிருந்து வெளியே போகவிட்டான்; அப்பொழுது எரேமியா அவனை நோக்கி: யெகோவா உன்னைப் பஸ்கூர் என்று அழைக்காமல், மாகோர் மீசாபீப் என்று அழைக்கிறார்.
அவர்கள் கலங்கி, பின்வாங்குகிறதை நான் காண்கிறதென்ன? சுற்றிலும் ஏற்பட்ட பயங்கரத்தினால் அவர்களுடைய பராக்கிரமசாலிகள் தோல்வியடைந்து, திரும்பிப்பாராமல் ஓட்டமாக ஓடிப்போகிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
நான் எப்பிராயீமைத் தீருவின் திசைவரை இருக்கிறதைப் பார்க்கிறபோது, அது நல்ல வசதியான இடத்திலே நாட்டப்பட்டிருக்கிறது; ஆனாலும் எப்பிராயீமர்கள் தங்கள் மகன்களைக் கொலை செய்கிறவனிடத்தில் வெளியே கொண்டுபோய்விடுவார்கள்.
‹இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத மார்பகங்களும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.›