TSK

TSK · Luke 12:35

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

யெகோவாவுடைய கை எலியாவின்மேல் இருந்ததால், அவன் தன்னுடைய அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வரும்வரை ஆகாபுக்கு முன்னே ஓடினான்.

அவர்களில் சோர்வடைந்தவனும் தடுமாறுகிறவனும் இல்லை; தூங்குகிறவனும் உறங்குகிறவனும் இல்லை; அவர்களில் ஒருவனுடைய இடுப்பின் கச்சை அவிழ்வதும், காலணிகளின் வார் அறுந்துபோவதும் இல்லை.

‹இவ்விதமாக, மனிதர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்களுடைய வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.›

‹புத்தியுள்ளவர்கள் தங்களுடைய விளக்குகளோடுகூடத் தங்களுடைய பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.›

சத்தியம் என்னும் கச்சையை உங்களுடைய இடுப்பில் கட்டினவர்களாகவும், நீதி என்னும் மார்புக்கவசத்தை அணிந்தவர்களாகவும்;

¶ ஆகவே, நீங்கள் உங்களுடைய மனதை ஆயத்தப்படுத்தி, தெளிவான புத்தி உள்ளவர்களாக இருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படும் கிருபையின்மேல் பூரண நம்பிக்கை உள்ளவர்களாக இருங்கள்.