¶ “இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பமாகவும் மற்றவள்மேல் வெறுப்பாகவும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் மகனானாலும்,
TSK
TSK · Malachi 1:3
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
அதின் ஆறுகள் பிசினாகவும், அதின் மண் கந்தகமாகவும் மாறி, அதின் நிலம் எரிகிற கீலாய்ப்போகும்.
அங்கே காட்டுமிருகங்களும் நரிகளும் ஒன்றையொன்று சந்தித்து, காட்டாட்டைக் காட்டாடு கூப்பிடும்; அங்கே ஆந்தைகளும் தங்கி, இளைப்பாறும் இடத்தைக் கண்டடையும்.
நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தங்குமிடமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாமல் அழித்துப்போடுவேன்.
நானோ ஏசாவை வெறுமையாக்கி, அவன் ஒளித்துக்கொள்ளமுடியாமல் அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்திவிடுவேன்; அவனுடைய சந்ததியாரும் அவனுடைய சகோதரரும் அவனுடைய அயலாரும் அழிக்கப்படுவார்கள்; அவன் இனி இருக்கமாட்டான்.
அப்பொழுது பாபிலோன் குடியில்லாத மண்மேடுகளும், வலுசர்ப்பங்களின் தங்குமிடமும், பாழும், ஈசல் போடப்படுதலுக்கு இடமுமாகப்போகும்.
அதற்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், சேயீர்மலையே, இதோ, நான் உனக்கு எதிராக வந்து, என்னுடைய கையை உனக்கு எதிராக நீட்டி, உன்னைப் பாழும் பாலைநிலமாக்குவேன்.
நீ தீர்க்கதரிசனம் சொல்லிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், நீங்கள் அந்நியதேசங்களில் மீதியானவர்களுக்குச் சுதந்தரமாக இருக்கும்படி அவர்கள் உங்களைப் பாழாக்கி, உங்களைச் சுற்றிலுமிருந்து விழுங்கினபடியினாலும், நீங்கள் வாயாடிகளுக்குப் பேச்சும் மக்களுக்கு அவதூறுமானவர்களானபடியினாலும்,
இதோ, நான் உங்களிடமிருந்து, உங்களைக் கண்காணிப்பேன்; நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்.
யூதா மக்களின் தேசத்திலே குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்குச் செய்த கொடுமையின் காரணமாக எகிப்து பாழாய்ப்போகும், ஏதோம் பாழான வனாந்திரமாகும்.
யாக்கோபு வம்சத்தார்கள் நெருப்பும், யோசேப்பு வம்சத்தார்கள் நெருப்புத்தழலுமாக இருப்பார்கள்; ஏசா வம்சத்தார்களோ வைக்கோல் துரும்பாக இருப்பார்கள்; அவர்கள் இவர்களைக்கொளுத்தி, ஏசாவின் வம்சத்தில் மீதியாக இல்லாமல் இவர்களை சுட்டெரிப்பார்கள்; யெகோவா இதைச் சொன்னார்.