TSK

TSK · Mark 13:14

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்களின் நடுவில் இருக்கிற எல்லா அந்நியர்களிலோ கீழ்படியாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நியர் ஒருவனும் என்னுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதில்லை.

அவர் ஒரு வாரம்வரைக்கும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியச்செய்வார்; அருவருப்பான இறக்கைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற அழிவு பாழாக்குகிறவன்மேல் தீரும்வரை ஊற்றும் என்றான்.

அனுதினபலி நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு நிலைநிறுத்தப்படும் காலம்முதல் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூறு நாட்கள் ஆகும்.

‹மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும். நீங்கள் அதைப் பரிசுத்த இடத்தில் நிற்பதைப் பார்க்கும்போது,›

Acts 8:30 TSK

அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குப் புரிகிறதா என்றான்.

சகோதரர்களே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாக இருக்கவேண்டாம்; துர்க்குணத்திலே குழந்தைகளாகவும், புத்தியிலோ தேறினவர்களாகவும் இருங்கள்.

இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை; அந்த மிருகத்தின் எண்ணைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கவேண்டும்; அது மனிதனுடைய எண்ணாக இருக்கிறது; அதினுடைய எண் அறுநூற்று அறுபத்தி ஆறு 666.