ஆபிரகாம் முதிர்வயதாக இருக்கும்போது, சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்தில் அவனுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
TSK
TSK · Matthew 1:2
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
லேயாள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: “யெகோவா என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் கணவன் என்னை நேசிப்பார்” என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பெயரிட்டாள்.
¶ பின்பு, பெத்தேலை விட்டுப் பயணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டானது.
யூதாவே, சகோதரர்களால் புகழப்படுபவன் நீயே; உன் கை உன் எதிரிகளுடைய கழுத்தின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய மகன்கள் உன்னைப் பணிவார்கள்.
அப்பொழுது யோசுவா எல்லா மக்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வ காலத்திலே உங்களுடைய பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன், ஐபிராத் நதிக்கு அப்பால் குடியிருந்தபோது அவர்கள் வேறு தெய்வங்களைத் தொழுதுகொண்டார்கள்;
¶ ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் மகன்கள் ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள்.
¶ ரூபன் இஸ்ரவேலுக்கு முதலில் பிறந்த மூத்தமகன் ஆவான்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய படுக்கையைத் தீட்டுப்படுத்தியதால், கோத்திரத்து அட்டவணையில் அவன் முதற்பிறப்பவனாக கருதப்படாமல், அவனுடைய மூத்த மகன் என்கிற பிறப்புரிமை இஸ்ரவேலின் மகனாகிய யோசேப்பின் மகன்களுக்குக் கொடுக்கப்பட்டது.
உன்னுடைய தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கும்போது நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகச்செய்தேன்.
நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.
அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தினராக இருந்தாலும் அனைவரும் பிள்ளைகள் அல்லவே; “ஈசாக்கினிடம் உன் வம்சம் விளங்கும்” என்று சொல்லியிருக்கிறதே.
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவர் என்று எண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலன் பெற்று, வயதானவளாக இருந்தும் குழந்தைப் பெற்றாள்.
யூதாகோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். ரூபன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். காத் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.