ஆரோனையும் அவனுடைய மகன்களையுமோ, தங்களுடைய ஆசாரிய ஊழியத்தைச் செய்வதற்காக நியமிக்கவேண்டும், அந்த ஊழியத்தைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படவேண்டும் என்றார்.
TSK
TSK · Numbers 1:51
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
¶ யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
அவர்கள் மகா பரிசுத்தமானவைகளின் அருகில் வரும்போது, சாகாமல் உயிரோடு இருக்கும்படி, நீங்கள் அவர்களுக்காகச் செய்யவேண்டியது:
இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பியது.
கோகாத்தியர் பரிசுத்தமானவைகளைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்; இவர்கள் வந்து சேருமுன்பு மற்றவர்கள் வாசஸ்தலத்தை நிறுவுவார்கள்.
அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல் மக்கள் உங்களுக்கு விரோதமாக முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியச்செய்வேன்” என்றார்.
ஆகையால் நீயும் உன்னோடேகூட உன்னுடைய மகன்களும் பலிபீடத்திற்கும் திரைக்கு உட்புறத்திற்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்வதற்காக, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கவேண்டும்; உங்களுடைய ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு பரிசாக அருளினேன்; அதைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலை செய்யப்படவேண்டும்” என்றார்.
ஆனாலும் பெத்ஷிமேசின் மனிதர்கள் யெகோவாவுடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், யெகோவா மக்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது யெகோவா மக்களைப் பேரழிவாக அடித்ததினால், மக்கள் துக்கமாக இருந்தார்கள்.