TSK

TSK · Numbers 7:10

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

¶ மோசே வாசஸ்தலத்தை நிறுவி, அதையும் அதின் எல்லாப் பணிப்பொருட்களையும், பலிபீடத்தையும் அதின் எல்லாப் பணிப்பொருட்களையும் அபிஷேகம்செய்து, பரிசுத்தப்படுத்தி முடித்த நாளில்,

சாலொமோன் யெகோவாவுக்குச் சமாதானபலிகளாக, 22,000 மாடுகளையும், ஒரு 1,20,000 ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாக ராஜாவும் இஸ்ரவேல் மக்கள் அனைவரும் யெகோவாவுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்தார்கள்.

எட்டாம் நாளை விசேஷித்த ஆசரிப்பு நாளாகக் கொண்டாடினார்கள்; ஏழுநாட்கள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழு நாட்கள் பண்டிகையையும் ஆசரித்தார்கள்.

எருசலேமின் மதிலை பிரதிஷ்டைசெய்யும்போது, துதியினாலும் பாடலினாலும், கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியர்களை எருசலேமுக்குக் கூட்டிவரத் தேடினார்கள்.

யெகோவாவே, என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு அவர்களை மகிழவிடாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.