TSK

TSK · 1 Chronicles 24:3

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

¶ தாவீது நோபிலிருக்கிற ஆசாரியனாகிய அகிமெலேக்கினிடம் போனான்; அகிமெலேக்கு நடுக்கத்தோடே தாவீதுக்கு எதிர்கொண்டுபோய்: ஒருவரும் உம்மோடு வராமல், நீர் தனித்து வருகிறது என்ன என்று அவனைக் கேட்டான்.

அகிதூபின் மகன் சாதோக்கும், அபியத்தாரின் மகன் அகிமெலேக்கும் ஆசாரியர்களாக இருந்தார்கள்; செராயா சரித்திர எழுத்தாளனாக இருந்தான்.

அவனுக்குப் பதிலாக ராஜா யோய்தாவின் மகன் பெனாயாவை இராணுவத்தின்மேலும், ஆசாரியனாகிய சாதோக்கை அபியத்தாரின் இடத்திலும் வைத்தான்.

ஆரோனின் மகன்களில் எலெயாசார் என்பவனுடைய மகன் பினேகாஸ்; இவனுடைய மகன் அபிசுவா.

பின்பு தாவீது ஆசாரியர்களாகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியர்களாகிய ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, ஏலியேல், அம்மினதாப் என்பவர்களையும் அழைத்து,

அகிதூபின் மகன் சாதோக்கும், அபியத்தாரின் மகன் அபிமெலேக்கும் ஆசாரியர்களாக இருந்தார்கள்; சவிஷா எழுத்தாளனாக இருந்தான்.

இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியர்களிலும் லேவியர்களிலும் குடும்பத் தலைவர்களாக இருக்கிற தலைவர்களுக்கும் முன்பாக, தங்கள் சகோதரர்களாகிய ஆரோனின் சந்ததி செய்ததுபோல, தங்களில் இருக்கிற குடும்பத் தலைவர்களான தலைவர்களுக்கும், அவர்களுடைய சிறிய சகோதரர்களுக்கும் சரிசமமாக சீட்டு போட்டுக்கொண்டார்கள்.