TSK

TSK · Esther 10:3

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, குனிந்து பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, முழு எகிப்துதேசத்திற்கும் அவனை அதிகாரியாக்கினான்;

உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற எல்லாவற்றிற்கும் வறுமை வராதபடி, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருடங்கள் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய மகனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள்.

நீர் பயப்படவேண்டாம்; என்னுடைய தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்காது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாக இருப்பேன்; அப்படி நடக்கும் என்று என்னுடைய தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான்.

இதை ஓரோனிய பட்டணத்து வாசியாகிய சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் கேட்டபோது, இஸ்ரவேல் மக்களின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் கோபமாக இருந்தது.

ஆகையால் ராஜாவின் அரண்மனை வாசலில் இருக்கிற ராஜாவின் வேலைக்காரர்கள் எல்லோரும் ஆமானுக்கு முன்பாக முழங்காலிட்டு வணங்கிவந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனுக்கு முன்பாக முழங்காலிடவுமில்லை, வணங்கவுமில்லை.

பொருளை வெளிப்படுத்தவும், கடினமானவைகளைத் தெளிவிக்கவும் உன்னாலே முடியுமென்று உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்போதும் நீ இந்த எழுத்தை வாசிக்கவும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கவும் உன்னாலே முடியுமானால், நீ இரத்தாம்பரமும் கழுத்திலே தங்கச்சங்கிலியும் அணிவிக்கப்பட்டு, ராஜ்ஜியத்திலே மூன்றாம் அதிபதியாக இருப்பாய் என்றான்.

நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவியானவருக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாக இருக்கிறது.

இவைகளிலே கிறிஸ்துவிற்கு ஊழியம் செய்கிறவன் தேவனுக்குப் பிரியமானவனும் மனிதனால் அங்கீகரிக்கப்பட்டவனுமாக இருக்கிறான்.