TSK

TSK · Esther 2:6

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனும், அவனுடைய தாயும், ஊழியக்காரர்களும், பிரபுக்களும், அதிகாரிகளும் பாபிலோன் ராஜாவினிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்; அவனைப் பாபிலோன் ராஜா தன் ஆளுகையின் எட்டாம் வருடத்திலே பிடித்துக்கொண்டான்.

¶ யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, மூன்று மாதங்களும் பத்து நாட்களும் எருசலேமில் அரசாண்டு, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்தான்.

யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் மகன் கோனியா, என் வலதுகையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

¶ பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோயாக்கீமின் மகனாகிய எகொனியா என்கிற யூதாவின் ராஜாவையும், யூதாவின் பிரபுக்களையும், எருசலேமிலுள்ள தச்சரையும், கொல்லரையும், சிறைப்பிடித்து, பாபிலோனுக்குக் கொண்டுபோனபின்பு, இதோ, யெகோவாவுடைய ஆலயத்தின் முன் வைக்கப்பட்டிருந்த அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைக் யெகோவா எனக்குக் காண்பித்தார்.