TSK

TSK · Exodus 30:38

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாட்கள்வரை சாப்பிடுவீர்களாக; முதலாம் நாளிலே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம்நாள்துவங்கி ஏழாம் நாள்வரையும் புளித்த அப்பம் சாப்பிடுகிறவன் எவனோ அவன் இஸ்ரவேலர்களிலிருந்து துண்டிக்கப்படுவான்.

ஆகையால், ஓய்வுநாளை அனுசரிக்க வேண்டும்; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதின் பரிசுத்தத்தை கெடுக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; அந்த நாளிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன்னுடைய மக்களின் நடுவில் இல்லாதபடி துண்டிக்கப்பட்டுபோவான்.

முகாமிற்குள்ளேயோ அல்லது வெளியேயோ அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாகக் கருதப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் மக்களுக்குள் இல்லாமல் அறுப்புண்டுபோவான்.

ஒருவன் சுத்தமுள்ளவனுமாகப் பயணம் போகாதவனுமாக இருந்தும், பஸ்காவை அனுசரிக்காமல் போனால், அந்த ஆத்துமா குறித்த காலத்தில் யெகோவாவின் பலியைச் செலுத்தாதபடியால் தன்னுடைய மக்களில் இல்லாமல் அறுப்புண்டுபோவான்; அந்த மனிதன் தன்னுடைய பாவத்தைச் சுமப்பான்.