ஐந்தாம் வருடத்திலே அவைகளின் பழங்களைச் சாப்பிடலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
TSK
TSK · Haggai 2:18
مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.
அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு அரசாட்சி செய்த இரண்டாம் வருடம்வரை நிறுத்தப்பட்டிருந்தது.
பின்பு யெகோவா செயல்தியேலின் மகனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுடைய ஆவியையும், யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய ஆவியையும் மக்களில் மீதியான எல்லோருடைய ஆவியையும் எழுப்பினார்; அவர்கள் வந்து, தங்கள் தேவனாகிய சேனைகளுடைய யெகோவாவின் ஆலயத்திலே வேலைசெய்தார்கள்.
¶ இப்போதும் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கு ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டதுமுதல் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.
விதைப்பு சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சைச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்; இந்த மக்களில் மீதியானவர்கள் இதையெல்லாம் சொந்தமாக்கிக்கொள்ள கட்டளையிடுவேன்.