TSK

TSK · Isaiah 44:11

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

அங்கே காணாமலும், கேளாமலும், சாப்பிடாமலும், முகராமலும் இருக்கிற மரமும் கல்லுமான, மனிதர்களுடைய கைவேலையாகிய தெய்வங்களை வணங்குவீர்கள்.

¶ பெலிஸ்தர்களின் பிரபுக்கள்: நம்முடைய எதிரியாகிய சிம்சோனை நம்முடைய தேவன் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்களுடைய தெய்வமாகிய தாகோனுக்கு ஒரு பெரிய பலிசெலுத்தவும், சந்தோஷம் கொண்டாடவும் கூடிவந்தார்கள்.

அதற்கு அவர்கள்: குற்றநிவாரணக் காணிக்கையாக நாங்கள் அவருக்கு எதைச் செலுத்தவேண்டும் என்று கேட்டதற்கு, அவர்கள்: உங்கள் எல்லோருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதை உண்டானதினால், பெலிஸ்தர்களுடைய அதிபதிகளின் எண்ணிக்கைக்குச் சரியாக மூலவியாதியின் சாயலின்படி செய்த ஐந்து பொன் சிலைகளும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்தவேண்டும்.

அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடி அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான்.

நீங்கள் விரும்பி தெரிந்துக்கொண்ட கர்வாலிமரங்களுடைய தோப்புகளுக்காக வெட்கப்படுவீர்கள்;

சித்திரவேலையான சிலைகளை நம்பி, வார்ப்பிக்கப்பட்ட உருவங்களை நோக்கி: நீங்கள் எங்கள் தெய்வங்கள் என்று சொல்கிறவர்கள் பின்னடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்.

திருடன் அகப்படுகிறபோது, எப்படி வெட்கப்படுகிறானோ, அப்படியே இஸ்ரவேல் வம்சத்தார் வெட்கப்படுவார்கள்; மரகட்டையைப் பார்த்து, நீ என் தகப்பன் என்றும்; கல்லைப்பார்த்து, நீ என்னைப் பெற்றெடுத்தாய் என்றும் சொல்லுகிற அவர்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுவார்கள்.

மனிதர் அனைவரும் அறிவில்லாமல் மிருக குணமானார்கள்; தட்டார் அனைவரும் தெய்வச்சிலைகளால் வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த சிலைகள் பொய்யே, அவைகளில் சுவாசம் இல்லை.

¶ அனேக ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள், பெல்ஷாத்சார் என்னும் ராஜா தன் பிரபுக்களில் 1,000 பேர்களுக்கு ஒரு பெரிய விருந்துசெய்து, அந்த ஆயிரம்பேர்களுக்கு முன்பாகத் திராட்சைரசம் குடித்தான்.

எப்படியென்றால், தெமேத்திரியு என்னும் பெயர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான்.