இப்பொழுதும் உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுடைய சகோதரர்களுக்குச் சொல்லியிருந்தபடியே, அவர்களை ஓய்ந்திருக்கச் செய்தார்; ஆகவே யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே யோர்தானுக்கு மறுபுறத்திலே உங்களுக்குக் கொடுத்த உங்களுக்குச் சொந்தமான தேசத்தில் இருக்கிற உங்களுடைய கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள்.
TSK
TSK · Isaiah 63:14
مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.
உம்முடைய மக்களான இஸ்ரவேலர்களுக்கு நிகரான மக்களும் உண்டோ? பூலோகத்து மக்களில் இந்த ஒரே மக்களை தேவன் தமக்கு மக்களாக மீட்பதற்கும், தமக்குப் புகழ்ச்சி விளங்கச்செய்வதற்கும் ஏற்படுத்தினாரே; தேவரீர் எகிப்திலிருந்து மீட்டுக் கொண்டுவந்த உம்முடைய மக்களுக்கு முன்பாகப் பயங்கரமான பெரிய காரியங்களை நடத்தி, உம்முடைய தேசத்திற்கும், அதிலிருந்த மக்களுக்கும், அவர்கள் தெய்வங்களுக்கும், உமது மகிமையை விளங்கச்செய்து,
பின்பு லேவியர்களான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா என்பவர்கள் மக்களைப் பார்த்து: நீங்கள் எழுந்து, என்றும் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய யெகோவாவை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி, யெகோவாவை நோக்கி: எல்லா துதி ஸ்தோத்திரத்திற்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்திற்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
இஸ்ரவேலிலும் மற்ற மனிதருக்குள்ளும் இந்நாள்வரைக்கும் காணப்படுகிற அடையாளங்களையும் அற்புதங்களையும் தேவரீர் எகிப்துதேசத்தில் செய்து, இந்நாளில் நிற்கும் புகழ்ச்சியை உமக்கு உண்டாக்கி,
அவருடைய தயவுள்ள விருப்பத்தின்படியே, இயேசுகிறிஸ்துவின் மூலமாக அவருக்குச் சொந்த பிள்ளைகளாகும்படி நம்மை முன்குறித்திருக்கிறார்.
யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குள் நடத்தியிருந்தால், பின்பு அவர் மற்றொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே.