TSK

TSK · Jeremiah 3:13

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

நீங்கள் துரத்திவிடும் மக்கள் தங்கள் தெய்வங்களை வணங்கிய உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து,

Job 33:27 TSK

அவன் மனிதரை நோக்கிப் பார்த்து: நான் பாவம் செய்து செம்மையானதைப் புரட்டினேன், அது எனக்குப் பலன் கொடுக்கவில்லை.

பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லையென்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான எல்லா மேட்டின்மேலும், பச்சையான எல்லா மரத்தின்கீழும் நீ வேசியாகத் திரிகிறாய்.

நீ மேடுகளின்மேல் உன் கண்களை ஏறெடுத்து, நீ வேசித்தனம்செய்யாத இடம் ஒன்று உண்டோ என்று பார்; வனாந்திரத்தில் அரபியன் காத்துக்கொண்டிருக்கிறதுபோல, நீ வழி ஓரங்களில் உன் நேசருக்குக் காத்துக்கொண்டிருந்து, உன் வேசித்தனங்களாலும், உன் அக்கிரமங்களாலும் தேசத்தைத் தீட்டுப்படுத்தினாய்.

எங்கள் வெட்கத்தில் கிடக்கிறோம்; எங்கள் அவமானம் எங்களை மூடியிருக்கிறது; நாங்களும், எங்கள் முற்பிதாக்களும் எங்கள் சிறுவயது முதல் இந்நாள்வரைக்கும் எங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தோம்; எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சொல்லைக் கேட்காமலும்போனோம்.

ஆனாலும் அவர்கள் என் சொல்லைக்கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் முற்பிதாக்களைப்பார்க்கிலும் அதிக பொல்லாப்பு செய்தார்கள்.

நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய யெகோவா.

நீ உனக்கு மண்டபங்களைக் கட்டி, உனக்குச் எல்லா வீதிகளிலும் உயர்ந்த மேடைகளை உண்டாக்கினாய்.

நமக்குப் பாவம் இல்லை என்று சொல்வோமானால், நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளுகிறவர்களாக இருப்போம், சத்தியம் நமக்குள் இருக்காது.