“சபையைக் கூடிவரவழைப்பதற்கும் முகாம்களைப் புறப்படச்செய்வதற்கும் உபயோகமாக இரண்டு வெள்ளி எக்காளங்களைச் செய்துகொள்; அவைகள் ஒரே வெள்ளித்தகட்டால் செய்யப்படவேண்டும்.
TSK
TSK · Joel 2:1
مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.
நீங்கள் அவைகளைப் பெருந்தொனியாக முழக்கும்போது, கிழக்கே இறங்கியிருக்கிற முகாம்கள் புறப்படவேண்டும்.
இந்தக் காரியத்தை நான் கேட்டபொழுது, என் ஆடையையும் என் சால்வையையும் நான் கிழித்து, என் தலையிலும் என் தாடியிலுமுள்ள முடியைப் பிடுங்கித் திகைத்தவனாக உட்கார்ந்திருந்தேன்.
உமக்குப் பயப்படும் பயத்தால் என்னுடைய உடல் சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.
அலறுங்கள், யெகோவாவின் நியாயத்தீர்ப்பின்நாள் சமீபமாயிருக்கிறது; அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா அழிவாக வரும்.
என்னுடைய கரம் இவைகளையெல்லாம் படைத்ததினால் இவைகளெல்லாம் உண்டானது என்று யெகோவா சொல்கிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.
¶ தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி, யூதாவில் அறிவித்து, எருசலேமில் கேட்கச்செய்யுங்கள்; நாம் பாதுகாப்பான பட்டணங்களுக்கு வந்துசேருங்கள் என்று சொல்லி, உரத்த சத்தமாகக் கூப்பிடுங்கள்.
இறந்தவர்களுக்காக ஏற்படுகிற துக்கத்தை ஆற்ற அவர்களுக்கு ஆகாரம் பரிமாறப்படுவதுமில்லை; ஒருவனுடைய தகப்பனுக்காவோ, ஒருவனுடைய தாய்க்காவோ துக்கப்படுகிறவர்களுக்குத் தேற்றரவின் பாத்திரத்தைக் குடிக்கக்கொடுப்பாருமில்லை.
உன்னதமான தேவன் சொல்லுகிறது என்னவென்றால்: தீங்கு வருகிறது; இதோ, ஒரே தீங்கு வருகிறது.
அந்தக் காலம் வருகிறது, அந்த நாள் நெருங்குகிறது; வாங்குகிறவன் சந்தோஷப்படாமலும், விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பானாக; அதின் திரளான கூட்டத்தின்மேலும் கடுங்கோபம் இறங்கும்.
மனிதகுமாரனே, நீ சத்தமிட்டு கதறு; வாள் என்னுடைய மக்களின்மேல் வரும்; அது இஸ்ரவேல் பிரபுக்கள் எல்லார்மேலும் வரும்; அதற்காக என்னுடைய மக்களுக்குள்ளே திகில் உண்டாயிருக்கும்; ஆகையால் உன்னுடைய விலாவிலே அடித்துக்கொள்.
காவற்காரன் வாள் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் மக்கள் எச்சரிக்கப்படாமலும், வாள் வந்து அவர்களில் யாராவது ஒருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன்னுடைய அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்.
ஆண்டவரே, உம்முடைய எல்லா நீதியின்படியே, உமது கோபமும் உமது உக்கிரமும் உம்முடைய பரிசுத்தமலையாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் எங்கள் முற்பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய மக்களாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் அனைவருக்கும் அவமானமானோம்.
கிபியாவிலே எக்காளத்தையும், ராமாவிலே பூரிகையையும் ஊதுங்கள்; பெத்தாவேனிலே கதறுங்கள்; பென்யமீனே உன்னைப் பின்தொடருகிறார்கள்.
அந்த பயங்கரமான நாளுக்காக ஐயோ, யெகோவாவுடைய நியயதீர்ப்பின் நாள், சமீபமாயிருக்கிறது; அது அழிவைப்போல சர்வ வல்ல தேவனிடத்திலிருந்து வருகிறது.
என் பரிசுத்த மலையாகிய சீயோனிலே வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள்; அப்பொழுது எருசலேம் பரிசுத்தமாக இருக்கும்; அந்நியர்கள் இனி அதைக் கடந்துபோவதில்லை.
அவர்: ஆமோஸே, நீ எதைக் காண்கிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.
யெகோவாகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் நாள் சமீபித்திருக்கிறது; யெகோவா ஒரு பலியை ஆயத்தம்செய்து, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார்.
அது பாதுகாப்பான நகரங்களுக்கும், உயரமான கோட்டைமதில்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள்.
நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்செய்வேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய யெகோவாவின் மலை பரிசுத்த மலை என்றும் அழைக்கப்படும் என்று யெகோவா சொல்லுகிறார்.
¶ ஆகவே, எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்கு அருகில் இருக்கும்பொழுது மட்டுமில்லை, நான் தூரத்தில் இருக்கும்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்களுடைய இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
நீங்களும் நீடிய பொறுமையோடு இருந்து, உங்களுடைய இருதயங்களை உறுதிப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாக இருக்கிறது.