திராட்சைப்பழம் பறிக்கும் காலம்வரைக்கும் போரடிப்புக் காலம் இருக்கும்; விதைப்புக் காலம்வரைக்கும் திராட்சைப்பழம் பறிக்கும் காலம் இருக்கும்; நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு, உங்கள் தேசத்தில் சுகமாகக் குடியிருப்பீர்கள்.
TSK
TSK · Leviticus 25:19
مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.
நீங்கள் யோர்தான் நதியைக் கடந்துபோய், உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் குடியேறும்போதும், சுற்றிலும் இருக்கிற உங்களுடைய எதிரிகளையெல்லாம் அவர் விலக்கி, உங்களை இளைப்பாறச்செய்கிறதினால் நீங்கள் சுகமாக வாழ்ந்திருக்கும்போதும்,
பூமி தன்னுடைய பலனைத் தரும், தேவனாகிய எங்களுடைய தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.
எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் பயமின்றி தங்கி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாக இருப்பான்.
அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாக இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விசாலமான மேய்ச்சலுள்ள இடத்திலே மேயும்;
நான் அவர்களுடன் சமாதான உடன்படிக்கைசெய்து, கொடிய மிருகங்களைத் தேசத்தில் இல்லாதபடி ஒழியச்செய்வேன்; அவர்கள் சுகமாக வனாந்திரத்தில் வாழ்ந்து, காடுகளில் உறங்குவார்கள்.
களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சைரசமும் எண்ணெயும் வழிந்தோடும்.