அவர்கள் நடுவிலே நான் தங்கியிருக்க, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குங்கள்.
TSK
TSK · Leviticus 26:11
مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.
நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற மக்களுடைய பழக்கவழக்கங்களின்படி நடக்காதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை வெறுத்தேன்.
உங்களுடைய சொந்த தேசம் தீட்டாக இருந்ததானால், யெகோவாவுடைய ஆசரிப்புக்கூடாரம் இருக்கிற யெகோவாவுடைய சொந்தமான அக்கரையில் உள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே பங்குகளைப் பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய பலிபீடத்தை அல்லாமல் உங்களுக்கு வேறொரு பலிபீடத்தைக் கட்டுகிறதினாலே, யெகோவாவுக்கும் எங்களுக்கும் எதிராக பிடிவாதம் செய்யாமல் இருங்கள்.
தேவரீர் தங்கக்கூடிய வீடும், நீர் என்றைக்கும் தங்ககூடிய நிலையான இடமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன் என்றும் சொல்லி,
சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது.
யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார்.
யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்குக் குடியிருக்கும் இடமாகும்படி விரும்பினார்.
ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார்; தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார்; அதினுடைய அரண்மனைகளின் மதில்களை விரோதியின் கையில் ஒப்புக்கொடுத்தார்; பண்டிகைநாளில் ஆரவாரம் செய்கிறதுபோல் யெகோவாவின் ஆலயத்தில் ஆரவாரம் செய்தார்கள்.
அப்படியே என்னுடைய பரிசுத்த ஸ்தலம் அவர்கள் நடுவிலே என்றென்றைக்கும் இருக்கும்போது, நான் இஸ்ரவேலைப் பரிசுத்தம்செய்கிற யெகோவா என்று தேசங்கள் அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
அவர்மேல் நீங்களும் ஆவியானவராலே தேவன் தங்கும் இடமாகச் சேர்த்துக் கட்டப்பட்டுவருகிறீர்கள்.