ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறதாவது: உன்னுடைய வீட்டார்களும் உன்னுடைய முன்னோர்களின் வீட்டார்களும் என்றைக்கும் என்னுடைய சந்நிதியில் நடந்துகொள்வார்கள் என்று நான் நிச்சயமாகச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாக இருப்பதாக; என்னை மதிக்கிறவர்களை நானும் மதிப்பேன்; என்னை அசட்டை செய்கிறவர்கள் அசட்டை செய்யப்படுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
TSK
TSK · Luke 19:26
مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.
உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடமிருந்து என்னுடைய கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன்.
அவர்கள் இவர்களுடைய அசுத்தமான சிலைகளுக்கு முன்பாக நின்று இவர்களுக்கு வேலைசெய்து, இஸ்ரவேல் மக்களை அக்கிரமத்தில் விழச்செய்தபடியினால், நான் என்னுடைய கையை அவர்களுக்கு விரோதமாக உயர்த்தினேன், அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
¶ ‹ஆகவே, தேவனுடைய ராஜ்யம் உங்களிடமிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகின்ற மக்களுக்குக் கொடுக்கப்படும்.›
‹உள்ளவன் எவனோ, அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவன் எவனோ, அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்› என்றார்.
‹அப்பொழுது அந்த நிர்வாகி: நான் என்ன செய்வேன், என் எஜமான் நிர்வாக பொறுப்பிலிருந்து என்னை நீக்கிப்போடுகிறானே நிலத்தை பண்படுத்துவதற்கும்; எனக்குப் பெலனில்லை, பிச்சையெடுக்கவும் வெட்கப்படுகிறேன்.›
சங்கீத புத்தகத்திலே அவன் குடியிருக்கும் வீடு அழியக்கடவது, ஒருவனும் அதில் குடியில்லாதிருப்பானாக என்றும்; அவனுடைய தலைமைத்துவத்தை வேறொருவன் பெறவேண்டும்’ என்றும் எழுதியிருக்கிறது.
‹நீ சகித்துக்கொண்டு இருக்கிறதையும், பொறுமையாக இருக்கிறதையும், என் நாமத்திற்காக ஓய்வு இல்லாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.›