தேவனே உம் ஒருவருக்கே விரோதமாக நான் பாவம்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை செய்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி வெளிப்படவும், நீர் நியாயந்தீர்க்கும்போது, உம்முடைய பரிசுத்தம் வெளிப்படவும் இதை அறிக்கையிடுகிறேன்.
TSK
TSK · Luke 7:29
مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.
‹இவ்விருவரில் எவன் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்தவன் என்று கேட்டார்;› அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: ‹வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.›
‹ஆனாலும் ஞானமானது அதின் குழந்தைகளால் நீதியுள்ளதென்று நிரூபிக்கப்படும்› என்றார்.
அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.
எப்படியென்றால், அவர்கள் தேவனுடைய நீதியை அறியாமல், தங்களுடைய சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறதினால் தேவனுடைய நீதிக்குக் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்.
அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராக இருக்கிறீர்.