TSK

TSK · Matthew 21:42

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

ஆதலால் யெகோவாவாகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது சோதனை செய்யப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறமாட்டான்.

இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழர்களும் கேட்கட்டும்; இவர்கள் அடையாளமாயிருக்கிற மனிதர்கள்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரச்செய்வேன்.

‹அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து:› ‹வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே,› ‹மூலைக்குத் தலைக்கல்லானது என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் பொருள் என்ன?›

அன்றியும், தீர்க்கதரிசிகளின் புத்தகத்திலே:

அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாக இருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்துவே மூலைக்கல்லாக இருக்கிறார்;

¶ மனிதர்களால் தள்ளப்பட்டதாக இருந்தும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடம் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,