TSK

TSK · Matthew 23:2

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع
Ezra 7:6 TSK

இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாக இருந்தான்; அவனுடைய தேவனாகிய யெகோவாவுடைய கரம் அவன்மேல் இருந்ததால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.

வேதபாரகனாகிய எஸ்றா அதற்கென்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு பிரசங்கபீடத்தின்மேல் நின்றான்; அவனருகில் அவனுக்கு வலதுபக்கமாக மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும், மாசெயாவும், அவனுக்கு இடதுபக்கமாகப் பெதாயாவும், மீசயேலும், மல்கியாவும், ஆசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள்.

இயேசு உபதேசம்பண்ணும்போது அவர்களைப் பார்த்து: ‹வேதபண்டிதர்கள் நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வாழ்த்துக்களை விரும்பியும்,›